ADDED : பிப் 23, 2026 06:56 AM

அ நிறம் | அளவு
பாலக்கோடு; பாலக்கோடு அடுத்த, மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலியை பறித்து சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எம்.செட்டிஹள்ளி ரயில்வே காலனி சேர்ந்தவர் பாஞ்சாலி, 55. இவர் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் - ஜோகிர்கொட்டாய் செல்லும் மண் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்-போது, அவ்வழியாக வந்த நபர், ஆடு விலைக்கு கிடைக்குமா என பேசியவாறு, பாஞ்சாலியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த அரை பவுன் தாலியை பறித்து சென்றார். இது குறித்து, பாஞ்சாலி அளித்த புகார் படி, மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை மேற்-கொண்டு, தாலியை பறித்து சென்றதாக சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த ஏழுமலை, 55 என்பவரை கைது செய்தனர்.
