ADDED : மார் 22, 2026 06:58 AM
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த பச்சினாம்பட்டியை சேர்ந்-தவர் வினித், 27,
கூலித்தொழிலாளி; இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தன்
நண்பர்கள் ராபின், சுதர்சன் ஆகியோ-ருடன், மது அருந்தி விட்டு, வீடு
திரும்ப அரூர் நான்குரோடு பாரதி நகர் அருகே நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த நெருப்பாண்டகுப்பத்தை
சேர்ந்த வெங்கடேசன், 20, என்பவர், தகாத வார்த்-தையால் திட்டி, வினித்தை
தாக்கியுள்ளார். தட்டிக்கேட்ட வினித்தை, வெங்கடேசனின் நண்பரான,
அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சித்திரைசெல்வன், 25, என்பவர்,
வினித்தின் தாடையை கத்தியால் கிழித்து ரத்தக்காயம்
ஏற்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகார் படி, அரூர்
போலீசார், சித்திரை-செல்வனை கைது செய்தனர். தலைமறைவான
வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
