/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
/
குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
ADDED : ஜூலை 19, 2025 01:34 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் முருகன். இவரது இரண்டாவது மனைவி முனியலட்சுமி, 46. முருகனின் முதல் மனைவியின் மகன் முத்தரசன், 33, கூலித்தொழிலாளி. இவர்கள் இடையே சொத்து பிரச்னை இருந்தது. இவர்களுக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில், தாபா ஓட்டலை வாடகைக்கு விட்டனர். கடந்த, 16ல், தாபா ஓட்டலுக்கான வாடகையை முத்தரசன், முனியலட்சுமியிடம் கேட்டார். அவர் தர மறுத்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அன்று இரவு, முத்தரசன் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை பொருத்தி முனியலட்சுமி தங்கி இருந்த வீட்டில் வீசினார். இதில் தீபிடித்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து, முனியலட்சுமி கொடுத்த புகார்படி பர்கூர் போலீசார் முத்தரசனை கைது செய்தனர்.