ADDED : ஆக 21, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பையர்நத்தம் - போதக்காடு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலை, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் தொடர்பாக அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை உள்ளிட்ட அலுவலர்கள் தணிக்கை செய்தனர்.
அப்போது அனும-தியின்றி பொலிரோ பிக் அப் வேனில், கற்கள் ஏற்றி வந்தது தெரிந்தது. அதை எடுத்து வந்த விழுதிப்பட்டியை சேர்ந்த முனேஷ், 24, என்பவர் மீது, பொம்மிடி போலீசில் பையர்நத்தம் வி.ஏ.ஓ., இளங்கோ புகார் செய்தார். அதன்படி போலீசார் முனேஷை கைது செய்து, பொலிரோ வேனை பறிமுதல் செய்-தனர்.
