ADDED : ஏப் 07, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்செங்கப்பாடியை சேர்ந்தவர் கோவிந்தன், 53, விவசாயி; இவர், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் மாம்பாடி சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.
தீர்த்தமலை - ஆண்டியூர் சாலையில், எஸ்ஸார் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் படுகாய மடைந்தார்.
அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
