/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தென்னை மரத்தில் ஏறியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
/
தென்னை மரத்தில் ஏறியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
ADDED : ஜூலை 09, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் மணி, 65. இளநீர் வியாபாரி. இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க மரத்தில் ஏறினார். மரம் ஏறியவுடன் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
வலியால் துடித்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தென்னை மட்டை மீது சாய்ந்தவர் உயிரிழந்தார். இதையடுத்து கிரேன் மூலம் அவரது உடல் மரத்தின் மீது இருந்து கீழே இறக்கப்பட்டது. கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.