/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.69.60 லட்சம் ஆன்லைன் மோசடி பணம் இழந்தவர் போலீசில் புகார்
/
ரூ.69.60 லட்சம் ஆன்லைன் மோசடி பணம் இழந்தவர் போலீசில் புகார்
ரூ.69.60 லட்சம் ஆன்லைன் மோசடி பணம் இழந்தவர் போலீசில் புகார்
ரூ.69.60 லட்சம் ஆன்லைன் மோசடி பணம் இழந்தவர் போலீசில் புகார்
ADDED : பிப் 01, 2025 06:57 AM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, நானூரை சேர்ந்த பட்டதாரி மாதேஷ், 28. இவர் பென்னாகரத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிச., 6 அன்று அவருடைய மொபைல் எண்ணுக்கு, லிங்க் இணைப்புடன் கூடிய மெசேஜ் வந்தது.
அதில், அதிக லாபம் பெறுவதற்கான வர்த்தகம் செய்ய மாதேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.அதன்படி, அந்த அப்ளிகேஷனை கிளிக் செய்து, முதற்கட்ட-மாக, 50,00-0 ரூபாய் ஆன்லைன் வர்த்தக நபர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதற்கான லாபமாக, 1,500 ரூபாய் மாதேஷ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். பின்னர், வர்த்த-கத்தில் அதிக முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபம் கிடைக்கும். எனவே, அதிக முதலீடு செய்யுமாறு தெரிவித்துள்-ளனர்.
இதில், ஏற்பட்ட நம்பிக்கையால், 69.60 லட்சம் ரூபாய்- அவர்-களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், மாதேஷ் முதலீடு செய்த தொகை மற்றும் லாபத் தொகையைத் திரும்பப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டதால், அதை தீர்க்க அதில் சம்பந்தபட்ட மொ பைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.
பணத்தை திரும்ப பெறுவதற்கான கட்டணமாக, 48.02 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த மாதேஷ் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளித்தார். இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.