/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
/
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED : ஜூலை 27, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் நான்குரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலில், 48ம் நாள் மண்டல அபிஷேக நிறைவு நாளையொட்டி, நேற்று காலை, 6:30 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டது. தொடர்ந்து, தர்மசாஸ்தா விஸ்வரூப தரிசனம் நடந்தது.
காலை, 8:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், தர்மசாஸ்தா மூல மந்திர ஜெப ஹோமம், பரிவார தெய்வங்களுக்கு ஹோமம், 10:00 மணிக்கு சங்காபிஷேகம், மூலவர் பரிவார தெய்வங்கள் உற்சவ தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தர்மசாஸ்தா பரிவார தெய்வங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி ஊர்வலம் நடந்தது.