/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மங்களூரு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல கோரிக்கை

ADDED : ஜூன் 29, 2024 02:15 AM
மொரப்பூர்: மொரப்பூரில் மங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், 1861ல் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 162 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தென்னக ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் அமைந்துள்ள மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஒரு சில ரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. எனவே, பயணிகளின் நலன் கருதி மங்களூர்-சென்னை, திருவனந்தபுரம்-சென்னை, சென்னை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.