/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆமை வேகத்தில் மஞ்சவாடி கணவாய் சாலை பணி
/
ஆமை வேகத்தில் மஞ்சவாடி கணவாய் சாலை பணி
ADDED : அக் 20, 2024 01:09 AM
பாப்பிரெட்டிப்பட்டி, அக்.20 ---
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை சாலை விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக போக்கு
வரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும், மக்களும் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல் சேலம் வரை, 4 வழி சாலை அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக வாணியம்பாடி முதல் அரூர் ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. மத்திய அரசு, 169.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி வரை, 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால் ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரையிலான சாலையில் உள்ள, 53 சிறு பாலங்களை அகலப்படுத்தும் பணி முதற்கட்டமாக நடக்கிறது. அப்பணிக்காக சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டும், சில இடங்களில்
கம்பிகள் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஏ.பள்ளிப்பட்டி முதல் சாமியாபுரம் கூட்ரோடு வரை, 90 சதவீத பணி முடிந்து போக்குவரத்து நடக்கிறது. சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து மஞ்சவாடி வரை, ஆமை வேகத்தில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால், சாலை ஒரு வழிப்
பாதையாக உள்ளது. இதனால் அவ்வழியே சென்று வரும் கனரக வாகனங்களால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
தர்மபுரி -தொப்பூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் டோல்கேட் கட்டணத்துக்கு அஞ்சி, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் ஏராளமான வாகனங்கள் காத்திருக்க வேண்டிய
நிலை ஏற்படுகிறது. நேற்று சாமியா
புரம் அடுத்த கல்லாத்து பட்டி பகுதி
யில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி, மேடான பகுதியில் ஏற முடியாமல் சாலையில் அப்படியே நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி தள்ளப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இரவில் வரும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்ற வாகனங்களை முந்தி செல்ல முற்படும்போது, விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால் காலை, மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
விரைவாக சாலை பணியை முடித்து, தடையில்லாத போக்கு
வரத்துக்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.