/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாரியம்மன் எல்லம்மன் கோவில் திருவிழா
/
மாரியம்மன் எல்லம்மன் கோவில் திருவிழா
ADDED : மே 11, 2025 01:08 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரத்தில் மாரியம்மன் எல்லம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் வெகு
விமர்சையாக கொண்டாடப்
படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த, 22 ல் கூழ் ஊற்றுதலுடன் விழா தொடங்கியது. கடந்த, 2ல் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகம் ஆராதனை நடந்தது.
பின் திருவிளக்கு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக் குடம் புறப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. 8 ல் மாரியம்மனுக்கும் காளியம்மனுக்கும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், பொம்மலாட்டம், புலியாட்டம் நடந்தது. நேற்று மாலை முத்து பல்லக்கில்
எல்லம்மாள் சாமி வீதி உலா
வந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.