ADDED : செப் 17, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
அரூர்; அரூர் அடுத்த கீரைப்பட்டியில் வெற்றி விநா-யகர் மற்றும் மாரியம்மன் கோவில் மகா கும்பா-பிஷேகம் இன்று காலை நடக்கிறது.
இந்நி-லையில், மதநல்லிணக்க ஒற்றுமையை வலுப்ப-டுத்தும் விதமாக, நேற்று கீரைப்பட்டி மசூதியில் இருந்து, முத்தவல்லி மக்பூல் தலைமையில், நிர்வாகிகள் மேளதாளம் முழங்க, மஞ்சள், குங்-குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை என, 30 சீர்வரிசை தட்டுகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் எடுத்து வந்தனர். அவர்களை கோவிலுக்குள் கோவில் நிர்வாகி கள் உள்-ளிட்டோர் வரவேற்றனர். பின் கொண்டு வரப்-பட்ட சீர்வரிசையை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
