ADDED : மே 29, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துார் அடுத்த ஓபிளிநாய்க்கனஹள்ளி கோம்பை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில், முனியப்பன் சுவாமிக்கு பூஜையும், பின் அன்னதானம் நடந்தது. நேற்று தாரை தப்பட்டையுடன் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், கிடா விருந்து, மஞ்சள் நீராடுதல் நிகழ்வு நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்துள்ளனர்.