/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : டிச 09, 2024 07:46 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பொம்மஹள்ளியில் விநாயகர், மாரியம்மன், கோடாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், 9:30 மணிக்குள் விநாயகர் கோவில், சின்ன பெரிய மாரியம்மன், மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடால அம்மன் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.