ADDED : மார் 20, 2024 10:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலைக்கல்லுாரியில் கணித துறை சார்பில், ராமானுஜன் கணித மன்றம் சிறப்பு சொற்பொழிவு முதல்வர் அன்பரசி தலைமையில் நடந்தது.
துறை தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கோவை தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் முத்தரசு, 'சம் இன்ட்ரஸ்டிங் பிராப்ளம்ஸ் இன் மேத்தமேடிக்ஸ்' எனும் தலைப்பில் பேசினார். விழாவில் மாணவர்களுக்கு, வினாடி வினா நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.

