/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாரியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம்
/
மாரியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம்
ADDED : மே 03, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரத்தில், மாரியம்மன் எல்லம்மாள் தேர்த்திருவிழா மற்றும் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை முதலாமாண்டு நிறைவு விழா கடந்த, 23 ல் தொடங்கியது.
இதில் கூழ் ஊற்றுதல், கொடியேற்றம் தொடர்ந்து முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்தல் நிகழ்ச்சி, நேற்று மாலை காளியம்மன், மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து, பக்தர்கள் அலகு குத்தி, பொம்மலாட்டம், புலியாட்டத்துடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக வெங்கடாசமுத்திரம் முக்கிய வீதிகள் வழியாக, பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம் சென்று, கோவிலை அடைந்தனர். கோவில் விழா வரும், 5 வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.