/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்
/
சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்
சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்
சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : பிப் 04, 2024 10:08 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை, சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில், ஜன., 15 முதல் பிப்., 14 வரை சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் பைக்குகள் செல்வதையடுத்து, அந்த வாகனங்களின் ஓட்டுனர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில், பாளையம் சுங்கச்சாவடி பகுதியில், வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ முகாமை, மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில், வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள், 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு செய்யப்பட்டது. முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வழங்க, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.
முகாமில், டி.ஆர்.,ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., தாமோதரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.