தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் முலாம்பழம் விற்பனை ஜோர்

தர்மபுரியில் முலாம்பழம் விற்பனை ஜோர்

தர்மபுரியில் முலாம்பழம் விற்பனை ஜோர்


ADDED : மார் 01, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முலாம் பழம் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் வழக்கத்தை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் குளிர்ச்சி மற்றும் நீர்-சத்து மிகுந்த பழங்கள் மற்றும் பழரசம் பருக ஆர்வம் காட்டி வரு-கின்றனர். எனவே, தர்ப்பூசணி தற்போது வரத்து அதிகரித்துள்ள முலாம்பழம் உள்ளிட்டவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்-ளது. இது குறித்து, தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து வெள்ளை நிற முலாம்பழங்-களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறோம். வெள்ளை நிற வகையை சேர்ந்த முலாம்பழங்கள் நல்ல மணம், சுவை மற்றும் சத்து நிறைந்தது என்பதால், அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது, மொத்த விற்பனையில் ஒரு கிலோ முலாம்பழம், 30 ரூபாய், சில்லரை விற்பனையில் ஒரு கிலோ, 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. கோடைக்கு குளுமை தரும் முலாம்பழத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us