/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாதவிடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி
/
மாதவிடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி
ADDED : டிச 31, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கடத்துார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவியருக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி, கல்லுாரி முதல்வர் வேதபாக்கியம் தலைமையில் நடந்தது.
இயந்திரவியல் துறை தலைவர் டாக்டர் லட்சுமிபதி, வட்டார இயக்க மேலாளர் முத்துசாமி, பேராசிரியர் ஹரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். கணினி பொறியியல் துறை தலைவர் ரத்தினம் வரவேற்றார். மாவட்ட வளப் பயிற்சியாளர்கள் பெருமாள், மதனி, வட்டார வளப் பயிற்றுநர் வெண்ணிலா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.