/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நகைக்காக வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்ற மேஸ்திரி கைது
/
நகைக்காக வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்ற மேஸ்திரி கைது
நகைக்காக வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்ற மேஸ்திரி கைது
நகைக்காக வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்ற மேஸ்திரி கைது
ADDED : பிப் 17, 2025 02:51 AM
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, நகைக்காக மூதாட்டியை கொலை செய்த, டைல்ஸ் மேஸ்திரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பெரியதோட்டம் புதுாரை சேர்ந்தவர் பிரபுராஜ், 64. இவர் மனைவி பத்மாவதி, 60. குழந்தைகள் இல்லாத இவர்கள், விவசாயம் செய்து வாழ்ந்து வந்-தனர். கடந்த வெள்ளியன்று இரவு, பத்மாவதி வீட்டிலும், பிர-புராஜ் வீட்டின் அருகே இருந்த மாட்டு கொட்டகையிலும் துாங்-கினர். நேற்று முன்தினம் காலை, வீட்டிற்கு வந்த பிரபுராஜ் வீடு திறந்திருந்த நிலையில், பத்மாவதி இறந்த நிலையில் இருந்ததை பார்த்தார். பென்னாகரம் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் விசாரணையில், பத்மாவதியை அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் மேஸ்திரி அறிவழகன், 34, கொலை செய்தது தெரியவந்தது. இவ-ருக்கு, 2.50 லட்சம் ரூபாய் கடன் இருந்ததால், நகையை தரும்-படி கேட்ட போது, பத்மாவதி மறுத்துள்ளார்.
சம்பவத்தன்று, வீட்டின் கதவிற்கு தாழ்ப்பாள் போடாமல் பத்மா-வதி துாங்கியபோது, வீட்டிற்குள் புகுந்த அறிவழகன், அவரது கழுத்திலிருந்த, 5 பவுன் நகையை பறித்துள்ளார். அவர் சத்தம் போட்டதால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்து விட்டு, வீட்டின் அருகே கற்களுக்கு அடியில் நகையை மறைத்து வைத்து விட்டு, போலீசார் விசாரணையின் போது, கூட்-டத்தோடு கூட்டமாக இருந்துள்ளார். நேற்று அவரை கைது செய்து, அவரிடமிருந்த, 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.