/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எம்.ஜி.ஆரை விஜயுடன் ஒப்பிடக்கூடாது: முனுசாமி
/
எம்.ஜி.ஆரை விஜயுடன் ஒப்பிடக்கூடாது: முனுசாமி
ADDED : பிப் 15, 2026 04:59 AM
கெலமங்கலம்: தேன்கனிக்கோட்டை, தளி, பென்னங்கூர், ஜவளகிரி, அஞ்-செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்த, அ.தி.மு.க., பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்-டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:
ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து, முதல்வர் ஆவதாக கூறுகிறார். அவர், வெளிநாட்டில் காரை வாங்கி வரி கட்டாமல் ஏமாற்றினார். அதை அதிகாரிகள் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு சென்றால், அதற்கு அவர், அப்பீல் போகிறார். இவர் தான் நாட்டு மக்களை காப்பாற்றுபவரா. சினிமாவில் ஷோ காட்டி விட்டு, ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார். தற்போது அவரது இரண்டாம் கட்ட தலைவ-ராக உள்ள ஒருவர், நம்மிடம் இருந்தவர். எம்.ஜி.ஆர்., ஜெயல-லிதா காலம் வரை, கட்சியிலிருந்து பொருளாதாரத்தில் உச்சம் பெற்று, அதிகாரம் அனைத்தையும் அனுபவித்து விட்டு அங்கே சென்றுள்ளார். கொள்கை கோட்பாட்டுக்காக அங்கு செல்ல-வில்லை. பதவிக்காக சென்றுள்ளார். அக்கட்சியில் லாட்டரி விற்கும் கூட்டம் உள்ளது. திருமாவ-ளவன் கட்சியிலும், தி.மு.க.,விலும் அவரை துரத்தி விட்டனர். நம் கட்சிக்கு வர பார்த்தார். நாம் அவரை ஏற்றுக்கொள்ள-வில்லை. தற்போது, நடிகர் கட்சிக்கு அவர் சென்றுள்ளார். காசு கொடுத்து பதவியை வாங்குபவர்கள், அந்த கட்சிக்கு செல்கி-றார்கள். இந்த மூன்றாவது கூட்டம் தலை எடுக்கக்
கூடாது. சமூகத்தில் எந்த கஷ்ட, நஷ்டங்களுக்கும் தன்னை ஆட்-படுத்தி கொள்ளாமல், ஏதோ ஒரு மாய தோற்றத்தை வைத்து கொண்டு, முதல்வர் பதவிக்கு வர, நடிகர்கள் ஆசைப்படுகி-றார்கள். அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் இடம் கொடுக்கக்கூ-டாது. எம்.ஜி.ஆரை அவருடன் ஒப்பிடக்கூடாது. ஒப்பிடுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

