/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லிட்டருக்கு ரூ.10 ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
/
லிட்டருக்கு ரூ.10 ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
லிட்டருக்கு ரூ.10 ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
லிட்டருக்கு ரூ.10 ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ADDED : நவ 07, 2025 01:03 AM
தர்மபுரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம், தர்மபுரி முத்து இல்லத்தில் நடந்தது. மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பெருமாள், நிர்வாகி சிவாஜி, தர்மபுரி மாவட்ட தலைவர் அன்பு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பருத்தி கொட்டை, புண்ணாக்கு மற்றும் கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. எனவே, பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 60 ரூபாய் என விலை உயர்த்தி வழங்க வேண்டும்.
லிட்டர் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக, 10 ரூபாய் வழங்க வேண்டும். ஆவின் நிலையங்களில் கால்நடை மருத்துவர் இல்லாததால், கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியவில்லை. எனவே, அனைத்து ஆவின் நிலையங்களிலும் கால்நடை மருத்துவரை பணியமர்த்த வேண்டும். பால் துணை குளிரூட்டும் நிலையங்களில் பணிபுரியும் ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆவின் ஒன்றியம், 50 சதவீதம் பணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பால் உற்ப்த்தியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், டிச., 28ல், தர்மபுரியில் மாநில மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், துணைத்தலைவர் மல்லையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

