/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி

ADDED : அக் 18, 2024 02:54 AM
சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் உறுதி
தர்மபுரி, அக். 18-
தர்மபுரியில், செவித்திறன் குறைபாடு உடையோருக்கு, அரசு மேல்
நிலைப்பள்ளி துவங்கி, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி
முன்னிலை வகித்தார்.
வேளாண் துறை அமைச்சர்
பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள், மாதாந்திர உதவித்தொகை, வேலைவாய்ப்பில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அதே போல, தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், திறமையை ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டு, பள்ளியில் பயிலும், 105 மாணவர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம், 1.05 லட்சம் ரூபாய் மதிப்பில், அஞ்சலக சேமிப்பு வைப்பு தொகையை அமைச்சர்
வழங்கினார்.
விழாவில், தி.மு.க., - எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா உள்பட பலர்
பங்கேற்றனர்.