தர்மபுரியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட அமைச்சர்
தர்மபுரியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட அமைச்சர்
ADDED : ஆக 01, 2026 05:07 AM
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் பட்டுவளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு பணிகளை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த பட்டு விவசாயி கேசவன் என்பவரின் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மனையை அமைச்சர் மதன்ராஜா
பார்வையிட்டார். அப்போது, மல்பெரி சாகுபடி, இலை உற்பத்தி, பட்டுப்புழு வளர்ப்பு முறைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பட்டுவளர்ப்பு வருவாய் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம், சோகத்தூரில், 19.20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளா-கத்தை பார்வையிட்டார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன், பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் சதீஸ், பட்டு வளர்ச்சி துறை சேலம் இணை இயக்குனர் பொன்மாரி, தர்-மபுரி மண்டல இணை இயக்குனர் இளையராஜா உட்பட பலர் உடன்
இருந்தனர்.
