ADDED : ஜூலை 06, 2026 01:41 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., மரகதம் தலைமை வகித்தார்.
அ.தி.மு.க.,கொள்கை பரப்பு துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் டாக்டர் அசோகன், தர்மபுரி நகர செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். பாலக்கோடு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் அலுவல-கத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில், பா.ம.க., மாவட்ட செயலாளர் அரசாங்கம், பா.ஜ., மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அக்-கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
