/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நல்லம்பள்ளி தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
/
நல்லம்பள்ளி தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
நல்லம்பள்ளி தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
நல்லம்பள்ளி தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
ADDED : அக் 20, 2024 01:10 AM
நல்லம்பள்ளி தனியார் நிதி
நிறுவனத்தில் பணம் திருட்டு
தர்மபுரி, அக். 20-
நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில், 75 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற நபர் குறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் எதிரில் தனியார் நிதி நிறுவனம், முதல் மாடியில் இயங்கி வருகிறது. நேற்று மதியம் நிதி நிறுவன ஊழியர்கள் கடையின் கண்ணாடி கதவை சாத்தி விட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது, நிதி நிறுவன அலுவலக கதவுகள் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தனர். டிராவில் வைத்திருந்த, 75 ஆயிரம் ரூபாய் மற்றும் இரு மொபைல் போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா, எஸ்.ஐ., விமல்குமார் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த,'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கைரேகையை பதிவு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட நபரை அதியமான்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.