/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
/
அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
ADDED : டிச 25, 2025 08:07 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஷில்பா பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நடந்து முடிந்த திட்டப்பணிகள், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்-கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி நக-ராட்சி, ஓசூர் மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகள் சார்பில் நடந்து வரும், புதிய சாலை பணிகள், முடிவுற்ற சாலைகள் பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட செயலாக்க குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர், 10 பேருக்கு 'டேப்'-களை கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் வழங்கினார்.
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், ஓசூர், சப் - கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்-கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், உள்-ளிட்ட அனைத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

