/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு
/
எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு
ADDED : அக் 09, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.பி., அலுவலகத்தில்
மாதாந்திர கலந்தாய்வு
தர்மபுரி, அக். 9-
தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற நிலுவையிலுள்ள வழக்குகளை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் குற்றம் நடக்காமல் தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் துவங்கும் முன், போலீஸ் வாகனங்களை தணிக்கை செய்து, அதன் செயல்பாடுகளை எஸ்.பி., ஆய்வு செய்தார்.