மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உலக சாதனை
மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உலக சாதனை
ADDED : மார் 16, 2026 07:56 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கும், 5 வயதுள்ள மாணவி ஹரித்ரா, 10, திருக்குறள்களை, 15.30 வினாடிகளில் தெளிவாகவும் அதி வேகமாகவும் சொல்லி, சாதனை படைத்தார். மேலும் இப்பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கும், 3 வயது மாணவர் வினிஷ், தமிழின் மெய் எழுத்துக்களை, 8 வினாடிகளில் தெளிவாகவும் அதிவேகமாகவும் சொல்லி சாதனை படைத்துள்ளார். இம்மாணவ, மாணவியின் சிறந்த நினைவாற்றல், தெளிவான உச்சரிப்பு மற்றும் மொழித்திறன் ஆகியவற்றை பாராட்டி, 'கிங்டம் வேர்ல்டு ரெக்கார்டு' நிறுவனம் உலக சாதனை பட்டியலில் அங்கீகரித்தது. இருவருக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தது.
இதை தொடர்ந்து உலக சாதனை படைத்த மாணவ, மாணவியை மொரப்பூர் மருதம் பள்ளி தலைவர் தவமணி, தாளாளர் திலகரசன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் சக்திவேல், பள்ளி போக்குவரத்து மேலாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் ராஜேஷ், துணை முதல்வர் ராமு, ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர்.
