சீரமைப்பு பணிக்கு சுரண்டப்பட்ட சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
சீரமைப்பு பணிக்கு சுரண்டப்பட்ட சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 07, 2026 04:04 AM
பாலக்கோடு; பாலக்கோடு பேரூராட்சியிலுள்ள, 18 வார்டு-களில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பாலக்கோடு டவுன் பகுதியில் தக்காளி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும் டவுன் பகுதியில் சாலை சேதமடைந்து இருந்தது. கடந்த பிப்., மாதம் பாலக்கோடு பகுதியிலுள்ள வெளிவட்ட சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால், பாலக்கோடு டவுன் பகுதியில், 15 வருடத்திற்கு முன் அமைத்த சாலைகள், சீரமைப்பு பணிக்காக சுரண்டி எடுக்-கப்பட்டன. சட்டசபை தேர்தல் சமயத்தில், சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது வரை, சாலை பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இதனால், சுரண்டி எடுக்கப்பட்ட சாலையில் ஏற்-பட்டுள்ள மேடு, பள்ளங்களால் வாகன டயர்க-ளுக்கு பிடிப்பு ஏற்படாமல், தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால், டூவீலர்கள் சறுக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சாலை சீர-மைப்பு பணியை உடனே தொடங்க, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை பாலக்-கோடு கோட்ட பொறியாளர் ரஞ்சித் கூறுகையில், ''பாலக்கோடு டவுன் மற்றும் வெளிப்பகுதி சோம-னஹள்ளி வரை நெடுங்சாலைத் துறைக்கு சொந்-தமான, 11 கி.மீ., சாலை சீரமைப்புக்காக, 9 கோடி ரூபாய்க்கு கடந்த ஜன., மாதம் டெண்டர் விட்டு பணிகள் தொடங்கின. பேரூராட்சிக்கு வெளியே சாலை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. தேர்தல் சமயத்தில் டவுன் பகுதியிலுள்ள, 4 கி.மீ., சாலை பணிகள் மட்டும் நடக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக மழையால், சாலை பணி மேற்-கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் பணி தொடங்கப்பட்டு, 7 நாளில் முடிக்கப்படும்,'' என்றார்.
