/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
அரசு கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 29, 2024 07:37 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறை தகடூர் புத்தக பேரவையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் அன்பரசி தலைமையில் நடந்தது. இதில் தகடூர் புத்தக பேரவை செயலாளர் முன்னாள் எம்.பி., டாக்டர் செந்தில், தமிழ்த்துறை தலைவர் சித்திரைசெல்வி, உதவி பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன்படி எதிர் வரும் காலங்களில், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி, தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளில், தமிழ் துறை உள்ளிட்ட கல்லுாரி மாணவ, மாணவியரை பங்கு பெற செய்து வெற்றி பெறுவதற்கான பயிற்சி, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துதல், படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர செய்தல் போன்றவற்றை, தமிழ் துறையும், தகடூர் புத்தக பேரவையும் இணைந்து, இலவசமாக வழங்க உள்ளது. கடந்த, 2015 முதல் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில், தமிழ் அறிஞர்களின் பிறந்தநாள், வார இறுதி நாட்களில் பேச்சு, கவிதை போட்டி மற்றும் புத்தக வாசிப்பு என, பல நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.