/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மருத்துவ சேவையால் டாக்டர், செவிலியரை தெய்வமாக பார்க்கும் மலைக்கிராம மக்கள்'
/
'மருத்துவ சேவையால் டாக்டர், செவிலியரை தெய்வமாக பார்க்கும் மலைக்கிராம மக்கள்'
'மருத்துவ சேவையால் டாக்டர், செவிலியரை தெய்வமாக பார்க்கும் மலைக்கிராம மக்கள்'
'மருத்துவ சேவையால் டாக்டர், செவிலியரை தெய்வமாக பார்க்கும் மலைக்கிராம மக்கள்'
ADDED : ஜூலை 08, 2025 01:38 AM
தேன்கனிக்கோட்டை, ''மலை கிராமத்தில் மருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள், செவிலியர்கள் தெய்வமாக பார்க்கப்படுகின்றனர்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஆலஹள்ளி, மாட்டு பட்டிக்குட்டை மலை கிராமங்களுக்கு, 14 கி.மீ., துாரம் நடந்தே சென்று, அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில், 300 மலை கிராமங்களுக்கு சென்று நான் ஆய்வு செய்திருக்கிறேன். கடைகோடி மனிதனுக்கும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்பது தான், தமிழக முதல்வரின் திட்டம். மலை கிராமத்தில் மருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள், செவிலியர்கள் தெய்வமாக பார்க்கப்படுகின்றனர். பெட்டமுகிலாளம் கிராமத்தில் ஆய்வுக்கு சென்றபோது, ஒரு பெண் குழந்தையை வைத்திருந்தார். அவரிடம் வயது என்ன என கேட்டபோது, 21 என்றும், குழந்தைக்கு, 7 வயது எனவும் குறிப்பிட்டார். அப்படியானால் அவருக்கு, 12 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. 18 வயதிற்கு கீழ், திருமணம் செய்து குழந்தை பெற்றால், தாய், சேய் பலவீனமாக இருப்பார்கள். இதனால் சரியான வயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய அரசு வலியுறுத்துகிறது. பெற்றோருக்கு கஷ்டம் இருந்தாலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.