/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல் மலையில் மண் சரிவு சாலையில் உருண்ட பாறைகள்
/
வத்தல் மலையில் மண் சரிவு சாலையில் உருண்ட பாறைகள்
ADDED : டிச 03, 2024 01:40 AM
வத்தல் மலையில் மண் சரிவு
சாலையில் உருண்ட பாறைகள்
தர்மபுரி, டிச. 2-
வத்தல் மலையில், கன மழையால் பாறைகள் சாலையில் உருண்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
'பெஞ்சால்' புயலால் கன மழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக, கனமழை பெய்ய தொடங்கியது.
இதில், தர்மபுரி அடுத்துள்ள வத்தல்மலையில் தொடர்ந்து பெய்த கனமழையால், 4, 6, 9 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், 9வது கொண்டை ஊசி வளைவில், பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் வத்தல்மலையில் இருந்து வந்த மக்கள் ஒன்றிணைந்து, சாலையில் இருந்த பாறைகளை அப்புறபடுத்தி, பஸ் மற்றும் வாகன போக்குவரத்து தங்குதடையின்றி செல்ல, சீரமைத்தனர்.