ADDED : ஆக 13, 2025 05:49 AM
பெரும்பாலை: தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையில் இருந்து மலையூர் காடு செல்லும் வழியில் மன்னர்களால் வழிபடப்பட்ட, 1,000 ஆண்டு பழமையான கோத்தல கொட்டை முனியப்பன் கோயிலில், ஆண்-டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக திருவிழா நடக்கி-றது.
நேற்று பெரும்பாலை, மலையூர்காடு, சாணாரப்பட்டி, பெத்-தானுார் ரோனிப்பட்டி, சோளிகவுண்டனுார் மற்றும் அதை சுற்றி-யுள்ள பகுதியில் வசித்து வரும் விவசாயிகள், ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். இந்த முனியப்பன் கோயிலில் விரதம் இருந்து, பூஜை செய்தால் விவசாயம் செழிக்கும், திருமண தடை விலகும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். நாகாவதி ஆற்றங்கரையிலிருந்து ஊர் பொதுமக்கள் சக்தி அழைத்து ஈட்டி, வேல் ஆகியவற்றை ஏந்தி மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த பின், முனியப்பன் சுவா-மிக்கு பூக்களால் அலங்கரித்து, பொங்கல் வைத்து, ஆடு, கோழி, பன்றி உள்ளிட்டவைகளை பலியிட்டு, படையலிட்டு சிறப்பு வழி-பாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்-பட்டது.