/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முத்துமாரியம்மன் கோவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
முத்துமாரியம்மன் கோவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : மார் 20, 2024 10:32 AM
தர்மபுரி: தர்மபுரி, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில், உள்ள குபேர கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பால்குடம் ஊர்வலம் நேற்று நடந்தது.
தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில், குபேர கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்ணியயாகம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியை தொடர்ந்து, தீபாரதனை நடந்தது. இன்று காலை குபேர கணபதிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
அதேபோல், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி அடுத்த செட்டியூர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 14- அன்று கொடியேற்றுடன் துவங்கியது. நேற்று திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்ட, தீர்த்தக்குடம், பால்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை யாக சாலையில் இருந்து, கோவில் விமான கோபுர கலசங்களுக்கு, புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

