/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு: காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி

ADDED : மே 01, 2024 01:51 PM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடக்கிறது.
இதில், நல்லம்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மேலும், கால்நடை விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழி மற்றும் மாடுகளை கொண்டு வருகின்றனர்.
நல்லம்பள்ளியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாத நிலையில், கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், வாரச்சந்தை அருகே எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. குறிப்பிட்ட ஒரு சில பஸ்கள் மட்டுமே இங்கு வந்து, பயணிகளை ஏற்றி செல்கிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் இந்த பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கடை வைத்து வருகின்றனர். இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், இங்கு வரும் பஸ்களும் உள்ளே வர முடியாமல், வெளியே நின்று விட்டு
செல்கிறது.
எனவே, பயணிகளின் நலன்கருதி, பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.