/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொ.துறிஞ்சிப்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று
/
பொ.துறிஞ்சிப்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று
பொ.துறிஞ்சிப்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று
பொ.துறிஞ்சிப்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று
ADDED : ஏப் 27, 2025 04:26 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திலுள்ள பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பொ.துறிஞ்சிப்பட்டி நலவாழ்வு மையத்திற்கு, தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்-ளது. பொதுமக்களுக்கான மருத்துவ சேவை மற்றும் தேசிய நல திட்ட செயல்பாடுகள், தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் தடுப்பு பணிகள், தாய்சேய் நல திட்ட செயல்பாடுகள் தரவுகளின் அடிப்படையில், தேசிய தரச்சான்று பரிசீலனைக்குழு மருத்துவர்கள் ராபின்குமார் சிங், ஸ்பன் ஆகியோர் ஆய்வு மேற்-கொண்டனர். சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் தர-வுகளின் அடிப்படையில், 87.53 சதவீத மதிப்பெண் பெற்றது.
இதையடுத்து, தர்மபுரி
மாவட்டத்தின், முதல் தேசிய சுகாதார தரச்சான்று பெற்ற துணை சுகாதார நிலையம் என்ற பெருமையை பொ.துறிஞ்சிப்பட்டி துணை சுகாதார நிலையம் பெற்றுள்ளது. வட்டார மருத்துவ அலு-வலர் கவுரிசங்கர் தலைமையிலான மருத்துவக்குழு, மருத்துவர் சுதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாதிக்பாஷா, சுகாதார ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், காரல்மாக்ஸ், சமுதாய செவிலியர் நாகேஸ்வரி, பகுதி செவிலியர் சிங்காரம், கிராம செவிலியர் செல்வி, ரம்யா ஆகியோருக்கு, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் பாராட்டு, வாழ்த்துக்களை தெரிவித்தார்.

