/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்
ADDED : செப் 17, 2025 01:42 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், கணினி அறிவியல் துறை சார்பில், தேசிய அளவிலான, 2 நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் முத்து மணி, கணினி அறிவியல் துறை தலைவர் சாந்தி ஜெஸ்லட் தலைமை வகித்தனர். துறை பேராசிரியை காயத்ரி வரவேற்றார்.
கோவை ஐ.டி., மென்பொருள் நிறுவன சோதனை முன்னணி தலைவர் ஜோயல் பிரின்ஸ், சென்னை என்கோரா இன்னோவேடிவ் லேபின் திட்ட மேலாளர் செல்வராஜ் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு கணினி அறிவியல் துறை தலைவர் சாந்தி ஜெஸ்லட் பரிசுகளை வழங்கினார். துறை பேராசிரியர்கள் மோகன், பிரீத்தா நன்றி கூறினர்.