/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடகத்தூரில் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
/
கடகத்தூரில் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
ADDED : பிப் 15, 2024 10:46 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பிரிவு மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சகம் சார்பில், மாவட்ட அளவிலான பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது. நாளை தர்மபுரி அடுத்த கடகத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இந்த முகாம் நடக்க உள்ளது. சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த பயிற்சிக்கு, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி கல்வித்தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே, அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் இந்த தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும், டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்கள், ஆப்சனல் பிரிவுகளில், ஓராண்டு பயிற்சி பெற்று அப்ரன்டீஸ்ஷிப் சான்றிதழ் பெறலாம்.
இப்பயிற்சிக்கு, மாதாந்திர உதவித்தொகையாக, 8,500 முதல், 18,000 ரூபாய் வரை அந்தந்த நிறுவனத்தால் வழங்கப்படும். எனவே, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம், நாளை பிப்., 16 அன்று தர்மபுரி அடுத்த கடகத்துார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்கும் சேர்க்கை முகாமில், அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, கடகத்துார் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம் என்ற முகவரியிலும், 94999 37454, 94422 86874 மற்றும், 94887 09322 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

