/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
/
நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 28, 2024 03:46 AM
தர்மபுரி: நவராத்திரியை முன்னிட்டு, அதியமான்கோட்டையில், கொலு பொம்மை தயாரிக்கும் பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நவராத்திரி விழா, நாடு முழுவதும் வரும் அக்.,3 முதல், 12 வரை கொண்டாடாப்படவுள்ளது. இதில், நவராத்திரியின், 9 நாட்களிலும் வீட்டில் கொலு பொம்மை வைத்து, பூஜை செய்து வழிபடுவது வழக்கம். வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மைகளில், விஷ்ணுவின் தசாவதார காட்சிகள், அஷ்டலட்சுமி, சீனிவாச கல்யாணம், சீதா ராமர் கல்யாணம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி, விஸ்வரூப தரிசன பொம்மை, உள்ளிட்ட, 50 க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருக்கும். இந்தாண்டுக்கான நவராத்திரி விழா அக்.,3 ல் தொடங்குகிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டையில் விநாயகர் சதுார்த்திக்கு பிறகு, நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணியில்,
50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். களி மண் மூலம், செய்த கொலு பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அதியமான்கோட்டையில் தயார் செய்யபடும் கொலு பொம்மைகளை வாங்க, தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.