ADDED : மார் 21, 2026 07:00 AM
கம்பைநல்லுார்; கே.ஈச்சம்பாடியில், பள்ளி இடமாற்ற விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், 1997ல் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்-பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை இல்லை. இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு செல்லும் வழியில், கிராம மக்கள் சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சமையல் கூடம், கழி-வறை வசதியுடன், வகுப்பறை கட்டடம் கட்டினர். அங்கு, 6 முதல், 10ம் வகுப்பு வரையிலான வகுப்-புகளை இடமாற்றம் செய்ய, கோரிக்கை விடுத்த நிலையில், அரசு அனுமதி வழங்கவில்லை.
இதனால், சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் கடந்த, 4ல் பேனர் வைத்தனர். இந்-நிலையில் கடந்த, 11ல்
தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி உள்ளிட்ட அதிகா-ரிகள், கே.ஈச்சம்பாடி வந்து ஊர் மக்களிடம் பேச்-சுவார்த்தை நடத்தினர். அதில் வரும், 20ல் தர்ம-புரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கும் பேச்சு-வார்த்தையில் கலந்து கொள்ள கூறினர்.
ஆனால், தங்கள் கிராமத்திற்கே வந்து பேச்சு-வார்த்தை நடத்த வலியுறுத்தி கடந்த, 17ல் தர்மபு-ரியில் இருந்து கே.ஈச்சம்பாடி வந்த அரசு டவுன் பஸ்சை, கிராம மக்கள் கறுப்பு கொடி ஏந்தி சிறை பிடித்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு கே.ஈச்சம்
பாடியில் உள்ள பஞ்., அலுவலகத்தில் பேச்சு-வார்த்தை நடந்தது.
இதில், தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலு-வலர் ஜோதிசந்திரா, அரூர் டி.எஸ்.பி., சதீஸ்-குமார், காரிமங்கலம் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி இடமாற்றம் குறித்து மனுவாக வழங்-குங்கள், அதனை சம்மந்தப்பட்ட உயரதிகாரிக-ளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, கிராமமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து, 6:00 மணிக்கு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
