/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய சிமென்ட் சாலை பணி: பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
/
புதிய சிமென்ட் சாலை பணி: பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
புதிய சிமென்ட் சாலை பணி: பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
புதிய சிமென்ட் சாலை பணி: பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ADDED : ஆக 10, 2025 01:11 AM
அரூர், அரூரில் சாலையை பெயர்த்து எடுத்து விட்டு, சிமென்ட் சாலை அமைக்குமாறு மக்கள் வலியுறுத்தியதால், புதிதாக சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 14வது வார்டுக்கு உட்பட்ட, 3வது கிராசில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை பெயர்த்து விட்டு, முறையாக சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் டவுன் பஞ். நிர்வாகம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தனர்.
நேற்று முன்தினம், 3வது கிராசில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, அப்பகுதி மக்கள், பழைய சாலையை பெயர்த்து, 'மில்லிங்' செய்யாமல் சாலை அமைக்கக்கூடாது. இதனால் அமைக்கப்படும் புதிய சாலையால், சாலையின் மட்டம் உயர்ந்து, வீடுகளின் மட்டம் தாழ்ந்து விடும். அதனால், சில நிமிட மழைக்கே, மழை நீர் மற்றும் கழிவு நீர் வீடுகளுக்குள் பாயும் நிலை ஏற்படும். கடந்தாண்டு பெய்த மழையால் இங்குள்ள அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன. அதனால், உரிய முறையில் சாலையை அமைக்க வேண்டும் என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றனர்.
சாலைப்பணி அரைகுறை
யாக நிறுத்தப்பட்டதால், தற்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே, அரூர் டவுன் பஞ்.,ல் பல இடங்களில் சிமென்ட் சாலை தரமற்று அமைக்கப்பட்டு இருப்பதாக, புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், இப்பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.