/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'காங்.,ல் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்'
/
'காங்.,ல் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்'
'காங்.,ல் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்'
'காங்.,ல் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்'
ADDED : நவ 28, 2025 01:33 AM
தர்மபுரி, ''மாவட்ட தலைவர் முதல், ஓட்டுச்சாவடி ஏஜன்ட் வரை, அனைத்து பொறுப்புகளுக்கும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்,'' என, கர்நாடகா, காங்., - எம்.எல்.சி., இவான் டிசோசா கூறினார்.
தர்மபுரியில் நடந்த மாவட்ட, காங்., கட்சியின் மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ராஜஸ்தான், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், காங்., கட்சியில் இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் கட்சி பொறுப்பு வழங்கிய பின், அங்கு கட்சி வளர்ந்து வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், காங்., கட்சியின் பணிகளை துரிதப்படுத்த, மாவட்ட தலைவர் முதல், ஓட்டுச்சாவடி ஏஜன்ட் வரை, அனைத்து பொறுப்புகளுக்கும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி, கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும் வகையில், இளைஞர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது. இதன் முடிவு, தேசிய கட்சி தலைமையிடம் வழங்கப்படும். காங்., கட்சியை வலுப்படுத்தும் வகையில், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் நன்கு செயல்படுவார்கள். வரும் சட்டசபை தேர்தலில், அதிக இடங்களை பெற்று, வெற்றி பெறுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

