/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முன்னாள் படை வீரர்களுக்கு புதிய அடையாள அட்டை
/
முன்னாள் படை வீரர்களுக்கு புதிய அடையாள அட்டை
ADDED : பிப் 17, 2024 12:35 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர், டி.என்.11 என்ற குறியீடு கொண்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். இவர் களுக்கு, டி.என்.27 என்ற புதிய குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய அடையாள அட்டை, மத்திய முப்படை வாரியத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை பெற, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, ராணுவ படையிலிருந்து விலகிய சான்று மற்றும் ஓய்வூதிய ஆணை ஆகியவற்றை, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின், அந்த அலுவலகத்தில் வழங்கப்படும் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.