/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் புத்தொழில் கண்காட்சி
/
தர்மபுரியில் புத்தொழில் கண்காட்சி
ADDED : நவ 22, 2025 01:31 AM
தர்மபுரி, : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தொழில் மையம் சார்பில் நடந்த தொழில் மற்றும் புத்தொழில் கண்காட்சியை, தமிழ்நாடு சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், மாவட்ட கலெக்டர் சதீஸ், முன்னிலையில் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில், பல்வேறு தொழில் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப் படுத்தினர். இதில், தமிழ்நாடு சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ் பேசியதாவது:
தர்மபுரி சிப்காட்டில் இட ஒதுக்கீட்டில், 15 சதவீதம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், சிட்கோவிற்கு வழங்கப்படும். கும்முடிபூண்டியை அடுத்து, தர்மபுரி சிப்காட்டிற்கு சுற்றுச்சுழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதால், மின்சார வாகனத்திற்கு தேவையான பேட்டரி உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், தர்மபுரி தொழிற்சாலைகள் சங்க தலைவர் தனசேகரன், தர்மபுரி புளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், தர்மபுரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுப்பையா பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

