/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.2.33 கோடியில் புதிய தார் சாலை பணி
/
ரூ.2.33 கோடியில் புதிய தார் சாலை பணி
ADDED : செப் 21, 2024 07:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் இருளப்பட்டி ஊராட்சியில், எஸ்.டி.சாலை முதல் நாகலூர் வரை, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,1.81 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கும், ஓசஹள்ளி ஊராட்சியில் கடத்தூர் மெயின் ரோடு முதல், கோடியூர் வரை, 33.19 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கும், தர்மபுரி தி.மு.க.,---எம்.பி., மணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் ஜெயக்குமார், ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை,
கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஓசஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.