தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தமிழக - கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

தமிழக - கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

தமிழக - கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்


UPDATED : செப் 12, 2016 01:44 PM

ADDED : செப் 12, 2016 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2016 01:44 PM ADDED : செப் 12, 2016 09:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர் : தமிழகம் - கர்நாடகா இடையேயான அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் அம்மாநில போலீசார், அத்திப்பள்ளியில் நிறுத்தி திருப்பி விடுகின்றனர். இதனால், அங்கு இரு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 6 நாட்களாக தடை பட்டிருந்த பஸ் போக்குவரத்து நேற்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், தமிழ் இளைஞர் ஒருவரை கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பஸ்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கர்நாடகாவிற்கு செல்ல இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோல், கர்நாடக மாநில பஸ்களை அத்திப்பள்ளியில் அம்மாநில போலீசார் நிறுத்தி வருகின்றனர். அத்திப்பள்ளியுடன் திருப்பி விடுகின்றனர். லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மாநில போலீசார் எல்லையில் நிறுத்தி விடுகின்றனர். ஒசூர் செல்ல வேண்டிய வாகனங்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லையில் தடுத்து திருப்பி கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இரு மாநிலங்களில் வாகனங்கள் தாக்கப்படுவதால் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us