/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அரசின் நிதி வீணடிப்பு என குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 03, 2025 01:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தாளநத்தத்தில், 2 ஆண்டு
களாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தர்மபுரி மாவட்டம் கடத்துார் ஒன்றியம் தாளநத்தம் கிராமத்தில், கடந்த, 2023-24ம் ஆண்டு ஒன்றிய பொதுநிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் நிறுத்தம் அருகே, குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியில் ஏற்கனவே உப்பு தண்ணீர் பெற அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ்
தொட்டியை அகற்றி விட்டு, அதன் இணைப்பை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்டது. அதன் மூலம் உப்பு தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்க வழி வகை செய்யப்பட்டது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு, சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. அதில் மக்கள், 5 ரூபாய் செலுத்தி, 20 லிட்டர் குடி தண்ணீர் பிடித்தனர்.
திறந்து, 3 நாட்கள் மட்டுமே செயல்பட்ட சுத்திகரிப்பு நிலையம் கடந்த, 2 ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் மக்கள் மீண்டும் புளோரைடு கலந்த உப்பு நீரை குடிக்க வேண்டிய அவலம் உள்ளது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள்
வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோன்று சுங்கரஹள்ளி, கேத்துரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் செயல்
படாமல், அரசின் நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.