/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீராத காய்ச்சல் பாதிப்பால் வடமாநில தொழிலாளி பலி
/
தீராத காய்ச்சல் பாதிப்பால் வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஜூன் 12, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உத்தம் மாலிக், 24; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 10 நாட்களாக தீராத காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரது தம்பி சித்தந்த மாலிக், 22, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார். ஆனால், வழியிலேயே உத்தம் மாலிக் உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.