/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் அணு விஞ்ஞானம் விளக்க பயிற்சி
/
பாலக்கோடு ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் அணு விஞ்ஞானம் விளக்க பயிற்சி
பாலக்கோடு ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் அணு விஞ்ஞானம் விளக்க பயிற்சி
பாலக்கோடு ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் அணு விஞ்ஞானம் விளக்க பயிற்சி
ADDED : ஜன 27, 2025 02:46 AM
தர்மபுரி: பாலக்கோடு, ஸ்ரீவித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளியில் அணு
விஞ்ஞானத்தின் வளர்ச்சி மற்றும் அவசியம் குறித்து, 'அணு யாத்-திரை - 2025' என்ற தலைப்பில் கல்பாக்க அணுமின் நிலைய மாதிரி அமைப்பு காட்சி நிகழ்வுகள் மற்றும் விளக்க பயிற்சி நடந்-தது. பள்ளி முதல்வர் அருள்குறிஞ்சி வரவேற்றார்.
ஸ்
ரீமூகாம்பிகை மற்றும் வித்யா மந்திர் கல்வி குழும தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசு-கையில்,
''இன்றைய அதிநவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவங்-களை நன்கு உணர்ந்து கொண்டு நீங்களும் உயர்பட்டங்கள் பயின்று, இதுபோன்ற அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, உயர்ந்த முன்னேற்றங்கள் அடைந்து, நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்,'' என்றார்.
கே.ஜி.எம்., மருத்துவமனை நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். இதில், கல்பாக்கம் அணுமின்நிலைய ஆராய்ச்சி குழுத்தலைவர் குமரேசன் இன்றைய மின்சார தேவை. அதற்கு அணுமின் உலைகளின் அவசியம், அணு மின்நி-லைய செயல்பாடு, இதனால் நாட்டின் வளர்ச்சி குறித்து விளக்க-மளித்தார். அவருடன் பயிற்சி பிரிவில் பணியாற்றும் சாய்பிரியா, அணு ஆராய்ச்சி துறையில் உயர்கல்வி குறித்தும், அங்கு படிப்ப-தற்கும், பயிற்சி மேற்கொண்டு பணிவாய்ப்பு பெறுவதற்கும், உண்டான வழிமுறைகள் குறித்து, மாணவியருக்கு கூறினார்

